எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி
அனைவருக்கும் இனிய ஆங்கில (2013)புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இணையதளத்தில் நன்மையும் தீமையும் அதிக அளவில் உள்ளது.
ஒரு தீக்குச்சி தீபத்தையும் ஏற்றலாம் வீட்டையும் கொளுத்தலாம். இது அவரவர் மன ஒழுக்கத்தை பொருத்தது.
இணையதளத்தை நன்மைக்காக உபயோகிக்கும் விதமாக கல்விக்காக செயல்படுத்த நீண்ட நாள் தேடலின் விளைவே நமது www.kelvibathil.com என்ற இணையதளம்.
மாணவ- மாணவியர்களுக்கும். வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வான TNPSC, IAS, IPS, TET, வங்கி, ரயில்வே தேர்வை எழுத உள்ளவர்களுக்கும், மேல் படிப்புக்கான நுழைவு தேர்வு எழுத இருப்பவர்களுக்கும் பயிற்சியளிக்கும் இணையதளமாக செயல்படுத்தவே இம்முயற்சி
நமது இணையதளம் கல்விப் பணிக்கான ஒன்றே உங்கள் படிப்பில் மேலும் திறமையை வளர்க்கவே இத்தளம் நமது இணையதளத்தில் வெளியிடப்படும் தேர்வு வினாக்களுக்கு உண்மையான தேர்வு மனப்பான்மையுடன் விடை அளிக்கவும் உங்கள் பாடப்புத்தகங்களையோ விடைப் புத்தகங்களையோ அல்லது நண்பர்களையோ வினாக்களுக்கு பதிலளிக்க உபயோகிக்க வேண்டாம்.
படித்தவற்றை நினைவு கூறவும், மேலும் மேலும் மனதி்ல் பதிய வைத்துக் கொள்ளவே இம் முயற்சி PRACTICE TEST/ ONLINE TEST என இரு வகை தேர்வுகள் ஒவ்வொரு பிரிவினர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் PRACTICE TEST இவ்வகை தேர்வு வினாக்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் பதி்லளிக்கலாம்.
ஆனால் தேர்வுக்கான குறிப்பிட்ட நேர இடைவெளியில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்து விடுங்கள்..... இல்லை என்றால் கேள்வித் தாள்கள் தானாகவே மறைந்து தேர்வு முடிந்து விடும். தேர்வு முடிந்த ஒரு சில வினாடி இடைவெளியில் நீங்கள் அளித்த பதி்ல்களை பரிசீலனை செய்து உங்கள் மதிப்பெண் பட்டியல் காண்பிக்கப்படும்.
தேர்வின் முடிவில் காண்பிக்கப்படும் மதிப்பெண் பட்டியலின் விவரங்களை முழுமையாக கவனித்துப் பாருங்கள் தவறான விடைகளுக்கு உரிய விடைகளை கண்டு நன்கு மனதில் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள்.
ONLINE TEST
Online test என்பது நமது இணையதளத்தின் அறிவிப்புபடி குறிப்பிட்ட நாட்கள் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நடத்தப்படும். இது முற்றிலும் உங்களின் பொதுத் தேர்வு முறைக்கு உரியபடி இருக்கும். இதற்கான விடைகளை தேர்ந்தெடுக்கும் போது விடைப் புத்தகங்களையும், நண்பர்களையும், மற்றும் இணையதளப் பக்கங்களையும் உதவிக்கு வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு தெரிந்த வினாக்களுக்கு மட்டுமே விடையை தேர்தெடுத்து எழுதுங்கள். தெரியாத வினாக்களுக்கு ஏதோ ஒரு பதிலை தேர்ந்தெடுக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க உங்கள் திறமையினை மதிப்பீடு செய்யும் தேர்வு. உங்களுக்கு பதில் தெரியாத வினாக்களின் உரிய பதில்களை நீங்கள் மதிப்பெண் பட்டியல் முலம் வரும் வினா விடையில் தெரிந்து கொண்டு மனதில் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள்.
மேலும் விளையாட்டு போட்டி போன்ற ஒரு உணர்வினை உருவாக்கும் விதமாக பொது அறிவுப் போட்டி ஒன்றையும் நடத்த உள்ளோம் இதற்கு...... பரிசுகளும் உண்டு. இது முழுக்க முழுக்க பயிற்சிக்கான தேர்வுகள் மட்டுமே.... இதன் வெற்றி தோல்வி....எதுவும் நிரந்தரமில்லை. அறிவிக்கப்படும் பரிசுகள் அனைத்தும் உங்களை ஊக்கப்படுத்தவே.... பரிசுக்காக தவறான முயற்சிகளை எடுக்காதீர்கள் பள்ளி, கல்லூரி மேலும் மேற்படிப்புக்கு ஏற்ற பள்ளிகளையும் கல்லுரிகளையும் தேர்ந்தெடுக்கும் விதமாக நமது இணையதளத்திலேயே பள்ளி, கல்லூரிகளுக்கு எனத் தனித் தனி பக்கங்கள் உருவாக்குறோம்.
இதனை பார்த்து மாணவ- மாணவியர்கள் மற்றும் பள்ளிகள் கல்லூரிகள் பயன் பெறும் வகையில் இணைப்பு பலமாக நமது இணையதளம் செயல்படுகிறது . இவை அனைத்தையும் விட தமிழ் மொழியில் இணையதளம் செயல்படுவதால் ஆங்கில மீடியம் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில வினாக்களுக்கான உரிய தமிழ் வினாக்களையும் பதில்களையும் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் வினாக்களுக்கான உரிய ஆங்கில அர்த்தங்களையும் முழுமையாக உணர்ந்து படிக்க வசதியாக இருக்கும். நமது இணையதளத்தை பயன்படுத்தி கல்வி அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளுமாறு அன்புடன் வாழ்த்துகிறோம். நமது இணையதளத்தில் நடைபெறும் தேர்வு விவரங்களை உங்களுக்கு தெரிந்த பள்ளி மற்றும் இணையதள நண்பர்களுக்கும் தெரியபடுத்தி அவர்களுக்கும் சிறந்த பயிற்சி கிடைக்க உதவுங்கள். நமது இணையதளம் மிகப்பெரிய வெற்றியடைய உங்களின் முழுமையான ஆதரவை நட்புடன் வரவேற்கின்றோம்.
